Wednesday, 24 July 2013

Munnar trip... My personal experience....

இந்த மாசம் ஜூலை 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் நான் எனது குடும்பத்துடன் மூணார் சென்றிருந்தேன்...


அதை பற்றி சொல்ல சரியான வார்த்தைகள் கிடைக்க வில்லை..
எனது மிக சிறந்த பயணம் இதுதான்... நான் கடவுளின் கை வண்ணம் கண்டு திகைத்து போனேன்.. சுத்தமும், அமைதியும் கண்டு பிரமித்தேன்...
ஒவ்வொரு திருப்பத்திலும், பேரழகு கொட்டி கிடக்கிறது...நான் நிறைய இடங்களில் கடவுளின் வித்தையை பார்த்தபடி அமர்ந்திருந்தேன்... எனது காரை வேகமாக ஓட்டி செல்லவே எப்போதும் விரும்புவேன், ஆனால் இந்த பயணத்தில் அது இயலவில்லை...



மட்டு பட்டி அணை, குண்டலா அணை, எகோ பாயிண்ட், டாப் ஸ்டேஷன், ராஜா மலை (இரவிகுலம் நேஷனல் பூங்கா).... இன்னும் நிறைய... இந்த இரண்டு நாட்களில் நான் எனது கடந்த காலத்தை, எதிர் காலத்தை மறந்திருந்தேன்.... உண்மையாக கேரளா ஒரு கடவுளின் சொந்த தேசம்.
கண்டீப்பாக பார்க்க கூடிய இடங்கள் பற்றிய தகவலை கீழ்க்கண்ட தகவல் தளத்தில் அறியலாம்
http://paradise-kerala.com/blog/tourist-spots-in-kerala/must-visit-places-in-munnar/


சில உபயோகமான குறிப்புக்கள் பயணிகளுக்கு...
1) காரிலோ, பைக் கிலோ நீங்கள் பயணம் செய்தால், உடுமல பேட்டை, செக் போஸ்டில் குரங்குகள் விளையாடும், ஜாக்கிரதை...
2) 10 க்கும் மேற்பட்ட நீர் விழ்ச்சிகளை நீங்கள் உடுமலை வழி முன்னார் பாதையில் காண முடியும்.. ஒற்றை பாதை, சேதமான ரோடு, என்றாலும், காட்சிகள் மனதை கொள்ளை கொள்ளும்.
 3) வீட்டில் இருண்டு சாப்பாடு எடுத்து கொள்வது  நல்லது, வழியில் சுவையான சாப்பாடு கிடைக்காது, விலையும் அதிகம்.
4) உங்களுக்கு சொந்த வாகனம் இருந்தால் அதில் செல்வது நல்ல காட்சிகள் கண்டால் நிறுத்தி, அனுபவித்து செல்லலாம்.
 5) வாகனம் ஓட்டும் போது ஜாக்கிரதை... ஒற்றை ரோடு, மற்றும் மழை வரும்.
6) இரவிகுலம் பார்க் கை மறக்காமல் பார்க்கவும்... மிக பெரிய நீர் விழ்ச்சியும், வரையாடு எனப்படும் அழிந்து வரும் அறிய மிருகத்தையும் காணலாம்..


7) நெஸ்ட் இன் என்ற 2 ஸ்டார் ஹோட்டல் இல் நங்கள் தங்கினோம்... 4 பேருக்கு (நான், எனது மனைவி, அம்மா, 5 வயது மகன்) 1300 ரூபாய் ஒரு நாளைக்கு... (மதியம் 2 மணியிலிருந்து அடுத்தநாள்  மதியம் 12  மணி வரை..)
cleartrip.com வழியாக பதிவு செய்தால் சிறப்பு விலை .
சாப்பாடும் பரவாயில்லை, காலை உணவு இலவசம்... பால்கனி வழியே காட்சிகள் அருமை
8) மழை... மழை... ஒரே மழை... எனக்கு கொண்டாட்டம்... எனது குடும்பம் நடுங்கியது... முன் ஏற்பாடுகளுடன் செல்லுங்கள்..
9) எகோ பகுதிக்கு ஆவலுடன் சென்றோம், பயங்கரமாக சப்தமிட்டால் மட்டுமே எதிரொல்லிகிறது, குழந்தைகள் மற்றும் பெண்களின் சத்தங்கள் ஒரு வழி பாதை தான்...
10) வழியெல்லாம் அழகு, சுத்தம்... நான் தவருதலாக ஒரு பேப்பரை கீழே போட்டு விட்டேன், உடனே ஒரு பெண்மணி அதை எடுத்து சுத்தம் செய்தார்... அதிலிருந்து நான் அந்த தவறை செய்ய வில்லை...

போதும் என்று நினைக்கிறன்... நீங்களும் போய்விட்டு வந்து உங்கள் அனுபவத்தை எழுதுங்கள்...

நன்றிகளுடன்,
பிரகாஷ்.
இதை ஆங்கிலத்தில் படிக்க கீழ் கண்ட வலை தளத்திற்கு செல்லவும்
http://www.mouthshut.com/review/Munnar-review-rsrqnoomsr

No comments:

Post a Comment