Monday, 29 July 2013

Some Best Tamil poems

கலாப்ரியா 

விதி 

அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலை மோதிக்கரைகிறது.
எனக்கதன்கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.






ரவி 
ஆசை


பறக்காமல் நில்
பிடிக்க ஆசை
பட்டாம்பூச்சி

 



அறிவுமதி

வாழ்க்கை 

 

 

மர வியாபாரி பார்க்கிறான்
வேர் முதல் கிளை வரை
குருவிக்கூடு நீங்கலாக! 


 

 

 

நா முத்துக்குமார்


எடை குறைவாய் 


பூக்களால்  அலங்கரிக்கப்பட்டது
விதவையின் பிணம்

 




அமுத பாரதி
ஐக்கூ அந்தாதி

 

வலிக்கிறது நெஞ்சம்
எத்தனை புத்தகங்கள்
சுமக்கும் குழந்தை முதுகு





  வைரமுத்து

இறுதியில் நான்


புதுப்புது இலட்சியங்களை
நோக்கி நடக்கும்
என் பாதங்களை எடுத்து வைத்தேன்
வானம் தோற்றது”





அ.சங்கரி 

எங்களுக்காக அழுது சிரித்துத்


தன்கனவுகளை எங்கள் மீது திணித்து
அது நடக்காத போது,
அழிச் சாட்டியம் செய்து
தோற்றுப் போய்
நிற்காது ஓடிக்கொண்டு
அவ்வப்போது நிறைய அன்பு செலுத்தும்
என் அம்மாவைப் பற்றி
எந்கக் கதைகளும் சொல்லுவதே இல்லை.”3





அமுத பாரதி
 காற்றின் கைகள்


”இந்தக்காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல்”1

 

 

 

 

 ஈரோடு தமிழன்பன்

பறவைகள் சொன்ன பாடம்  

பாதை போடுவதும் இல்லை
பாதையை அழிப்பதும் இல்லை
பறவைகள் சொன்ன பாடம்...

 




மு.மேத்தா


”உன்னைக் கேட்பவர்களுக்கு
உன்னை முழுமையாகத்தர
ஒப்புக்கொள்
நீயும் மழையாவாய்”

 

 

 

 

தபூசங்கர் 

அழகான பொருள்கள் எல்லாம்
உன்னை நினைவுபடுத்துகின்றன
உன்னை நினைவுபடுத்துபவை
எல்லாம் அழகாகவே இருக்கின்றன...



நீ இல்லாத நேரத்திலும்உன் இருக்கையில் அமர்ந்திருக்கிறதுஉன் அழகு. .....

 

அற்புதமான காதலை மட்டுமல்ல அதை உன்னிடம் சொல்ல முடியாத அதி அற்புதமான மௌனத்தையும் நீதான் எனக்குத்தந்தாய்.

 

 

 

 

 

மீரா

கத்திரிக்காய் என்ன காதலா?  

இரவில்
காதல் என்ன கத்திரிக்காயா?
தொடர் கதை எழுதிய
வாணி மணாளன்
பகலில்
காய் கறிக்கடை
சந்தைக்கு சென்று
கத்திரிக்காய் விலை
கிலோ இரண்டென கேட்டு
அதிர்ந்தார் அயர்ந்தார்
கத்திரிக்காய் கடைக்காரன்
கடுப்பில் சொன்னான்
அவ்வளவு மலிவாய்
அள்ளிக்கொண்டு செல்ல
கத்திரிக்காய் என்ன காதலா?







பொன். இரவீந்திரன்

தடங்கள்

தேம்பித்தேம்பி அழுதனர்
எதிர்வீட்டு மாமா இறப்பில்...
ஓ..... கடன்காரர்கள்!


 

 

 

 

நா முத்துக்குமார்

இட்லிப்புத்திரர்கள்




இட்லிகள் மென்மையானவை.
வெதுவெதுப்பானவை.

சைபர் சைபராய்
வட்டக்குழியில் வெந்தவை.

திடப்பொருளாய் தோன்றி
இளகிய நிலையில் திரவமாகி
வெப்பத்தால் இறுகியது
அதன் உருவம்.

மிகமுக்கியம்
இட்லிகள் கொள்கையற்றவை.
சாம்பாரில் மிதவையாகவும்,
சட்னியில் துவையலாகவும்,
ஏதுமற்றப் பொழுதுகளில்
எண்ணெய் மிதக்கிற
மிளகாய்த்தூளில் துணுக்கெனவும்
எதனுடனும் அமையும்
இட்லிகளின் கூட்டணி

கம்ப்யூட்டர் ‘சிப்ஸ்’ விற்கிற
அந்நிய நாடுகளில்
உள்ளூர் இட்லிகளுக்கு
அமோக வரவேற்பு

மேலும்
இட்லிகளை
அஃறினை என்று
அர்த்தப்படுத்த முடியாது
அவை
குட்டிப்போட்டுப் பாலூட்டும்
இனத்தைச் சார்ந்தவை





 

 

 

தாமரை 

புத்தர் சிரித்தார் 

ஆக்சிஜன் மேலிருந்த
அன்பு குறைந்துபோய்
இப்போதெல்லாம்
ஹைட்ரஜனோடு
ஐக்கியமாகி விட்டோம்
புத்தர் சிரித்தார் என்று
நாமும் சிரித்து வைத்தோம்
அணுக்குண்டுகளைக்
கக்கத்தில் இடுக்கிக் கொண்டு
மனித நேயத்தை
ஏவு கணையில்
ஏற்றி அனுப்பி விட்டார்களே
என்ற உதைப்பின் ஊடாக.. 

 

 

 

யாரோ...

நடு பகல், சுடும் மணல்...
பாவம் என் பாத சுவடுகள்...

 

 

 




 

No comments:

Post a Comment