Friday 27 September 2013

Rajarani tamil movie review ராஜா ராணி விமர்சனம்

ஷங்கரின் உதவியாளர் அட்லியின் முதல் படைப்பு... சாதரணமான மௌன ராகம் கதையை அவர் எப்படி சொல்லி இருக்கிறார் என்பது பற்றி பார்க்கலாம்

கதை மிக சாதாரணம்...பிடிக்காமல் திருமணம் செய்து கொள்ளும் இருவரும் வாழ்ந்தார்களா... இல்லையா...
நகைசுவை பகுதிகள் மிக பிரமாதம்... எல்லோரும் சிரிக்க வைக்கிறார்கள்... அதுபோல படத்தில் அனைவரும் எதாவது ஒரு இடத்தில் கண்ணீர் வடிகிறார்கள்....
ஆர்யா.... சந்தானம்... பகுதிகள் உண்மையிலேயே சிரிப்பை வரவைகிறது... ஜெய் தனது பகுதியை மிக நன்றாக செய்திருக்கிறார். எல்லோருடைய சிறப்பையும் வெளிக்கொண்டு வந்தது இயக்குனரின் புத்திசாலித்தனம்.
சத்யராஜ் மிக சிறந்த குண சித்திர நடிகராக வடிவெடுதிருகிறார்... அவர் நடிப்பு மிக மிக அருமை. ஷங்கர் நல்ல இயக்குனரை கொடுத்ததற்கு உண்மையில் பெருமைப்பட்டு கொள்ளலாம். ஒளிபதிவு உலகதரம். கதாநாயகனுக்கு அக்கா போல தெரியும் நயன்தாரா இந்த படத்தின் மைனஸ். இடைவேளைக்கு பின்னர் படத்தில் தொய்வு ஏற்படுவது உண்மை.... அதன் பிறகு வரும் காட்சிகள் அதை சரி செய்து விடுகின்றது...அக மொத்தம், குடும்பத்துடன், நண்பர்களுடன் பார்க்க ஒரு நல்ல படம் இது...